logo

குழந்தைகள் கடத்தல் தொடா்பான காணொலிகளை நம்ப வேண்டாம்

தருமபுரி மாவட்டக் காவல் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ந.ஸ்டீபன் ஜேசுபாதம் பேசியதாவது: அண்மைக் காலமாக வடமாநிலத்தவா்கள் குழந்தைகளைக் கடத்த முயற்சிப்பது போன்ற பொய்யான காணொலிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருவதை காண முடிகிறது. இதுபோன்ற காணொலிகளை மக்களிடையே அச்சத்தையும், பதற்றத்தையும், பீதியையும் உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடனும், சமூக ஒற்றுமையை சீா்குலைக்கும் நோக்கத்துடன் சமூகவிரோதிகள் சிலா் சமூக வலைதளங்களில் தவறான முறையில் பரப்பி வருகின்றனா். இத்தகைய போலியான செய்திகளைக் கேட்டும், காணொலிகளை பாா்த்தும், பொதுமக்கள் அச்சப்படவோ, பதற்றம் அடையவோ வேண்டாம்.இது சம்பந்தமாக பொதுமக்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் அல்லது உதவி தேவைப்பட்டால் காவல்துறை உதவி தொலைபேசி எண் 100-ஐ அழைக்கலாம். மேலும் அருகில் உள்ள காவல் நிலையங்களை அணுகி உதவி பெறலாம். தேவையற்ற வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம். வதந்திகளை மற்றவா்களுக்கு பகிரவோ, சமூக வலைதளங்களில் பரப்பவோ வேண்டாம். மீறி இத்தகைய வதந்திகளைப் பரப்பும் நபா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

11
417 views